2017-04-27 16:16:00

செர்னோபிள் அணு உலை விபத்தின் 31வது ஆண்டு


ஏப்.27,2017. இரஷ்யாவின் செர்னோபிள் (Chernobyl) என்ற இடத்தில் ஏற்பட்ட அணு உலை விபத்தின் 31வது ஆண்டு நினைவை, ஏப்ரல் 26, இப்புதனன்று, ஐ.நா. பொது அவை, கடைப்பிடித்தது.

1986ம் ஆண்டு, ஏப்ரல் 26ம் தேதி, செர்னோபிள் அணு சக்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால், கதிரியக்கம் கொண்ட துகள்கள், 1,55,000 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரவி, இரஷ்யா, பெலாருஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் பாதகமான விளைவுகளை உருவாக்கின என்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையொன்று கூறுகிறது.

முப்பது ஆண்டுகள் கடந்தபின்னரும், செர்னோபிள் விபத்தின் தாக்கங்கள் இன்னும் உணரப்பட்டு வருகின்றன என்றும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள சமுதாயங்களுக்கு, தொடர்ந்து உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், ஐ.நா. வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த விபத்தின் காரணமாக, 84 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும், 52,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலங்கள் பாழாயின என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.