2017-04-27 16:00:00

மெக்சிகோ ஆயர் பேரவைக்கு திருத்தந்தையின் செய்தி


ஏப்.27,2017. நாசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பத்தின் மதிப்பீடுகளை, மெக்சிகோவில் வாழும் குடும்பங்கள் பின்பற்றும்வண்ணம், அந்நாட்டு ஆயர்கள் வழிநடத்தவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 24, இத்திங்கள் முதல், 28 இவ்வெள்ளி முடிய மெக்சிகோவில் நடைபெறும் அந்நாட்டு ஆயர் பேரவையின் 103வது ஆண்டு கூட்டத்திற்கு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

134 ஆயர்கள் கலந்துகொள்ளும் இந்தப் பேரவை, திங்களன்று, குவாதலூப்பே அன்னை மரியாவின் திருத்தலத்தில் நிகழ்ந்த திருப்பலியுடன் ஆரம்பமானது.

மேலும், மெக்சிகோ அரசின் அநீதமான சில முடிவுகளுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் இணைந்து, ஏப்ரல் 28 வெள்ளியன்று மேற்கொள்ளும் போராட்டத்திற்கு, கத்தோலிக்க சமுதாயம் முழு ஆதரவு தரவேண்டும் என்று, மெக்சிகோ ஆயர்கள் பேரவை விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.