2017-04-29 16:51:00

காப்டிக் திருத்தந்தையின் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.29,2017. எகிப்தின் உயர்மட்ட அதிகாரிகளை, கெய்ரோ Al-Masah பயணியர் விடுதியில் சந்தித்து உரையாற்றி, பரிசுப்பொருள்களை வழங்கிய பின்னர், அங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, எகிப்து, காப்டிக் திருத்தந்தை முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களின் மாளிகை சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு நடந்த சந்திப்பில், காப்டிக் முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

திருத்தந்தையே, இன்று உமது சந்திப்பு, மக்கள் மத்தியில் உடன்பிறந்த உணர்வு மற்றும், அன்பின் வழியில், ஒரு புதிய பாதையாக உள்ளது, மிகுந்த மோதல்களாலும், சண்டைகளாலும் கிழிக்கப்பட்டுள்ள ஓர் உலகில், அமைதியின் அடையாளங்களில் ஒன்றாக நீர் இருக்கின்றீர், வன்முறை மற்றும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, அமைதி மற்றும், அன்பை விதைக்கும் உண்மையான சக்திகள் இவ்வுலகத்திற்குத் தேவைப்படுகின்றன. 2013ம் ஆண்டு மே 10ம் தேதி வத்திக்கானுக்கு நாங்கள் மேற்கொண்ட பயணத்தையும், அங்குக் கிடைத்த நல்வரவேற்பையும் நன்றியோடு நினைவுகூர்கின்றோம். அமைதியின் பூமியில், அமைதியின் திருத்தந்தையாக, தங்களை வரவேற்கின்றோம் என்றார், முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ். முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்கள் வரவேற்று உரையாற்றிய பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உரையாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.