2017-05-02 16:00:00

எகிப்து பயணம், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு ஆசீர்வாதம்


மே,02,2017. “ஒருமைப்பாடு மற்றும், பகிர்ந்து வாழும் பண்புகள் அதிகரிப்பதற்கு நாம் ஒன்று சேர்ந்து உழைப்போம்; நல்லதொரு மற்றும், அமைதி நிறைந்த சமூகங்களை அமைப்பதற்கு ஒத்துழைப்பு உதவும்” என்ற வார்த்தைகளை, தன் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்து நாட்டுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்களுக்கு, ஆசீர்வாதமாக இருந்தது என்று, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் கூறினர்.

கெய்ரோ நகரில், திருத்தந்தை மேற்கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இத்திருத்தூதுப் பயணம், எகிப்தியரில் ஆழமான நல்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், அந்நாட்டின் ஆர்த்தடாக்ஸ்  கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்களுடன் உள்ள உறவை அதிகரித்துள்ளது என்றும், அருள்பணி Rafic Greiche அவர்கள் கூறினார். 

திருத்தந்தையின் 27 மணி நேர எகிப்து திருத்தூதுப் பயணம் பற்றி CNS செய்தியிடம் பேசிய, எகிப்து ஆயர் பேரவையின் பேச்சாளரான, அருள்பணி Greiche அவர்கள், அன்பு, அமைதி மற்றும் நம்பிக்கையின் செய்தியை திருத்தந்தை வழங்கினார் என்றார்.

பொதுவான திருமுழுக்கு பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தை, முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை, கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய முயற்சி என்றும், அருள்பணி Greiche அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.