2017-05-04 16:05:00

நேர்காணல் – பாத்திமாவில் அன்னை மரியா காட்சியின் 100ம் ஆண்டு


மே,04,2017. போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில், லூசியா(10), பிரான்சிஸ்கோ(8),  ஜெசிந்தா(6) ஆகிய மூன்று சிறாருக்கு, 1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி வரை, அன்னை மரியா காட்சியளித்தார். இந்தக் காட்சிகளின் கடைசி காட்சியில், லூசியா, அன்னை மரியாவிடம் அவர் பெயர் என்னவென்று கேட்டபோது, “நானே செபமாலை அன்னை” எனப் பதில் சொன்னார் அன்னை. அக்காட்சியின் போது, அங்கு ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் கூடியிருந்தனர். அப்போது, வானத்தில் கதிரவன் மூன்று வட்டங்கள் அமைத்து, அங்குமிங்கும் அசைந்தாடியதை மக்கள் கண்டு வியந்தனர். இக்காட்சிகளின் நூறாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, இம்மாதம் 12, 13 தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா திருத்தலத்திற்குச் செல்கிறார். இந்த நூறாம் ஆண்டை முன்னிட்டு, பாத்திமா அன்னை காட்சிகள் பற்றி வத்திக்கான் வானொலியில் பேசுகிறார், மரியின் ஊழியர் சபையின் அ.பணி. ஜான் பால்








All the contents on this site are copyrighted ©.