2017-05-10 16:48:00

தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் 101 வயது மூதாட்டி


மே,10,2017. இந்தியாவைச் சேர்ந்த, 101 வயது மூதாட்டி, மான் கவுர் அவர்கள், 100மீட்டர் ஓட்டப் பந்தயம் ஒன்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற, உலக மூத்தோர் போட்டியில் அவர் இப்பதக்கத்தை வென்றார்.

நூறு மற்றும் அதற்கும் அதிகமான வயதுடையோருக்கான பிரிவில் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் அவர் மட்டுமே என்பதால், அவருக்கு பதக்கம் உறுதியானது என்றாலும், அவர் 100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்துள்ளது, ஓர் உலகச் சாதனையாகக் கருதப்படுகிறது.

தனது 93வது வயதில், ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்க ஆரம்பித்த மான் கவுர் அவர்களை, 'சண்டிகரின் அதிசயம்' என்று நியூசிலாந்தின் ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.

இதுவரை 17 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இவர், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.