சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

விசுவாசத்துடன் பின்பற்றுவதற்கான அருளை வேண்டுவோம்

பெரு நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

15/05/2017 16:52

மே,15,2017. இயேசுவை மிகுந்த விசுவாசத்துடன் பின்செல்வதற்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம் என, இத்திங்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை வார்த்தைகளில் அல்ல, மாறாக, செயல்களின் வழியாக விசுவாசத்துடன் பின் செல்லவும், நம் சிலுவைகளை பொறுமையுடன் சுமந்து செல்லவும் தேவையான வரத்தை இறைவனிடம் வேண்டுவோம் என, @pontifex என்ற முகவரியுடன் கூடிய திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐந்தாண்டிற்கு ஒருமுறை ஆயர்கள் பங்கேற்கும் ‘அத் லிமினா’ சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த, பெரு நாட்டின் 39 ஆயர்களை, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து, அவர்களுக்கு உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதே நாளில், மால்ட்டா நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் அலெச்ஸாந்த்ரோ தி எரிக்கோ அவர்களையும் திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

15/05/2017 16:52