சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

வீணாக்கப்படும் உணவு - ஐரோப்பிய பாராளுமன்ற தீர்மானம்

வீணாக்கப்படும் உணவுப் பொருள்கள் - AP

17/05/2017 15:54

மே,17,2017. உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவதைக் குறைப்பது, மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானத்திற்கு, ஐரோப்பிய ஆயர்கள் பேரவை தன் பாராட்டைத் தெரிவித்துள்ளது.

"வளங்களை திறம்பட நிர்வகித்தல்: உணவு வீணாக்கப்படுவதைக் குறைத்தல், உணவு பாதுகாப்பை முன்னேற்றுதல்" என்ற மையக்கருத்துடன், ஐரோப்பிய பாராளு மன்றத்தில், இச்செவ்வாய் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திற்கு, ஐரோப்பிய ஆயர்களின் முழு ஆதரவு உண்டு என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

2014ம் ஆண்டு, நவம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தினருக்கு உரை வழங்கிய வேளையில், ஐரோப்பிய சமுதாயத்தில் பொதுவாகக் காணப்படும் 'தூக்கியெறியும் கலாச்சாரம்' பற்றி அவர் பகிர்ந்த கருத்துக்களை, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில், ஒவ்வோர் ஆண்டும், 8 கோடியே 80 இலட்சம் டன் எடையுள்ள உணவு வீணாகிறது என்பதையும், ஒவ்வொரு ஐரோப்பியரும் ஒவ்வொரு வாரமும் குறைந்தது, 2 கிலோ எடையுள்ள உணவைத் தூக்கியெறிகின்றனர் என்றும், ஆயர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வீணாக்கப்படும் உணவில், 53 விழுக்காடு, இல்லங்களில் வீணாக்கப்படுகின்றது என்று கூறும் ஐரோப்பிய பாராளுமன்றம், உணவை வீணாக்காமல் இருக்கும் வழிகள் குறித்து, குடும்பங்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

17/05/2017 15:54