2017-05-20 16:25:00

சிறார் தொழில்முறையை ஒழிப்பதில் இந்திய காரித்தாஸ் தீவிரம்


மே,20,2017. இந்தியாவில் சிறார் தொழில்முறையை ஒழிக்கும் நோக்கத்தில், இந்திய காரித்தாஸ் நிறுவனம், தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என, பீதேஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

கிராமங்கள் மற்றும், நகரங்களில் அமைப்புமுறை சாராத தொழில் துறைகளில் சிறார் அதிகமாக வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் எனக் கூறும் பீதேஸ் செய்தி நிறுவனம், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டார்ஜிலிங் மாவட்டத்தை, சிறார் தொழிலாளர் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு, காரித்தாஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது எனத் தெரிவித்தது.

காரித்தாஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ள இத்திட்டத்தின்படி, குறைந்தது 45 சிறார் தொழிலாளருக்கு மறுவாழ்வு வழங்குவதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கிடையே, தமிழகத்தின் திருப்பூர் ‘சேவ்’அமைப்பினரின் முயற்சியால், திருப்பூரையடுத்த கிராமங்களில் சிறார் தொழிலாளர் இல்லாத நிலை உருவாகியிருப்பதாக, தி இந்து நாளிதழ் கூறியது. இந்த அமைப்பினர், சிறார் தொழிலாளர்களை மீட்டு, பள்ளியில் சேர்க்கும் பணியை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்றனர்.

இதன் பயனாக, திருப்பூர் அண்ணாநகர், பாண்டிய நகர் பகுதிகளில், 35 குழந்தைகள் பாராளுமன்றங்கள் இயங்குகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.