2017-05-23 16:35:00

அணு ஆயுத ஒழிப்பின் தேவை குறித்த விழிப்புணர்வு


மே,23,2017. அணு ஆயுதங்களைத் தடை செய்யும் புதிய ஒப்பந்தம் ஐ.நா. அவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது Pax Christi  பிறரன்பு அமைப்பு.

மார்ச் மாதம் ஐ.நா.வில் துவங்கிய முதல் சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவாக, தற்போது அணு ஆயுத ஒழிப்பு பரிந்துரையை ஐ.நா. நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளார் அக்கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த கோஸ்டா ரிக்கா தூதுவர் Elayne Whyte.

உலகை மாற்றியமைக்க உதவும் இந்தப் புதிய பரிந்துரை, இக்காலத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு எனப் பாராட்டியுள்ளது Pax Christi கிறிஸ்தவ அமைப்பு.

உலகில் அணு ஆயுதப் போரைக் கொணர்ந்து, இறைவனின் படைப்பை அழிக்க எவரும் விரும்பவில்லை, அப்படியிருக்கையில், அணு ஆயுதங்களின் தேவை என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள Pax Christi அமைப்பு, அணு ஆயுத ஒழிப்பு குறித்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள், ஜூன் மாதம் 15ம் தேதி துவங்குவதற்கு முன்னர் அணு ஆயுத ஒழிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை அனைத்து சமூகக் குழுக்களிடையே உருவாக்க முயன்று வருவதாகவும் தெரிவித்தது.

ஆதாரம் : ICN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.