2017-05-24 16:00:00

பாசமுள்ளப் பார்வையில்…: பொறுப்புகள் தானே வரும்


நேற்றுதான் தேர்வு முடிந்திருந்தது ரமேஷுக்கு. படிப்பில் அதிக அக்கறை எடுத்துவரும்  மகனைக் குறித்து பெருமிதம் அடைந்தார் தாய் மரகதம். இனி வேலை தேடப்போவதாகச் சொல்லி விட்டான் மகன். குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்து, தந்தை முகம் பாராமலேயே கடந்த 20 ஆண்டுகள் வளர்ந்துவிட்ட ரமேஷ், சுட்டித்தனத்திற்கு பெயர்போனவன்தான். தேர்வுகள் முடிந்த அடுத்த நாள் காலை, தாய் விழிப்பதற்கு முன்னரே எழுந்துகொண்ட ரமேஷ், வீதியில் உள்ள குழாயில் போய் தண்ணீர் பிடித்து வந்தான். அவனே வீட்டையும் பெருக்கி, சுத்தம் செய்துவிட்டு, பால் வாங்கிவர கடைக்குச் சென்றான். அம்மாவுக்கு ஒரே வியப்பு. கரண்ட் பில் கட்ட ஐந்து ரூபாய் இலஞ்சம் கொடுத்தால்தான் செல்லும் ரமேஷா இவன்? அம்மாவுக்காக இதைச் செய்டா என்று கெஞ்சினால்கூட, அடுத்த தெருவுக்குச் சென்று, ஒரு லிட்டர் பால் வாங்கி வராத மகனா, இன்று தண்ணீர் பிடித்து வைத்திருக்கிறது?  மகன் வந்தவுடனேயே கேட்டார் தாய், ‘என்னடா ஆச்சு உனக்கு’ என்று. ‘படிப்புதான் முடிந்து விட்டதே அம்மா. இனி தேர்வு முடிவுகள் வந்து வேலை கிடைக்கும்வரை சும்மாதானே இருக்க வேண்டும். அதனால் என் அம்மாவுக்காக இதையெல்லாம் செய்யலாம் என்று நினைத்தேன்’ என்று சொன்னான் ரமேஷ். தன் மகனின், மறைத்து வைக்கப்பட்டிருந்த பாசத்தைக் கண்டபோது, தன் கண்களை சேலை தலைப்பால் துடைக்க வேண்டியிருந்தது அந்த தாய்க்கு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.