2017-05-29 16:03:00

திருத்தந்தையுடன் கானடா பிரதமர்


மே,29,2017. இத்திங்களன்று காலை, கானடா பிரதமர் Justin Trudeau அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

தன் மனைவி Sophie Gregoire-Trudeau அவர்களுடனும், அரசு உயர் மட்ட குழுவினருடனும், திங்களன்று காலை நண்பகல் 12 மணி 45 நிமிடங்களுக்கு  திருப்பீடம் வந்த கானடா பிரதமர், திருத்தந்தையை தனியாக சந்தித்து உரையாடி, பின்னர் திருத்தந்தையுடன்,  தனியாகவும், தன் மனைவியுடனும், அரசுக் குழுவினருடனும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

திருத்தந்தையுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார், கானடா பிரதமர் Justin Trudeau .

கானடா பூர்வீக இன மக்களுக்குரிய பணிகள், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்தவற்றில் ஒன்றிணைந்து போராடுதல், மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை போன்ற விவகாரங்கள், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.