2017-05-31 16:36:00

டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் மாண்பு- பன்னாட்டு கருத்தரங்கு


மே,31,2017. குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் உலகை உருவாக்கும் நோக்கத்துடன், அக்டோபர் 3ம் தேதி முதல், 6ம் தேதி முடிய உரோம் நகரின் கிரிகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிகோரியன் பல்கலைக் கழகமும், WePROTECT என்ற அகில உலக கூட்டணி அமைப்பும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கில், 140க்கும் மேற்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என்று கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள், இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினர்.

"டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் மாண்பு" என்ற தலைப்பில்  நடைபெறும் இக்கருத்தரங்கின் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

உலகெங்கும் வலைத்தளத்தைப் பயன்படுத்தும் 320 கோடி பேரில், 80 கோடிக்கும் அதிகமானோர் குழந்தைகள் என்பதால், அவர்களை பாதுகாப்பது நம் கடமை என்ற நோக்கத்துடன் இந்தக் கருத்தரங்கு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.