2017-06-02 16:19:00

ஜூன் 05, உலக சுற்றுச்சூழல் தினம்


ஜூன்,02,2017. உலகின் பல்வேறு உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு, நாடுகள் தங்களுக்குள்ள கடமைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளார், மனித உரிமைகள் மற்றும், சுற்றுச்சூழல் குறித்த ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி ஒருவர்.   

ஜூன் 05, வருகிற திங்களன்று, உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள John H. Knox அவர்கள், நலமான சுற்றுச்சூழல் அமைப்பு, பல்வேறு உயிரினங்களைச் சார்ந்துள்ளது என்பதால், அழிவின் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றுவது நாடுகளின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு கோடிக்கு மேற்பட்ட ஆண்டுகள் வரலாற்றில், உலகம் முதன்முறையாக,  பல்வேறு உயிரினங்களின் அழிவைச் சந்திக்கும் ஆபத்திலுள்ளது என, அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர் எனவும் தெரிவித்தார், Knox.

சரணாலயங்களை அழித்தல், வேட்டையாடுதல், மாசுக்கேடு, காலநிலை மாற்றம், படைப்பை அதிக அளவில் பயன்படுத்தல் போன்றவை உள்ளிட்ட பல காரணங்களால்  பல்வேறு உயிரினங்கள் அழிகின்றன, இதனைத் தடுப்பதற்கு அரசுகள் அளித்துள்ள ஒப்பந்தங்களைச் செயல்படுத்துமாறும், Knox அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.