2017-06-06 16:45:00

பேராலயப் புனிதப்பொருட்களை சேதப்படுத்திய தீவிரவாதிகள்


ஜூன்,06,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி பேராலயம் தீக்கிரையாக்கப்படுவதற்கு முன்னர் அதனுள்ளிருந்த புனிதப் பொருட்கள் சேதமக்கப்பட்டுள்ளன என்ற தற்போதைய செய்தி குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அம்மறைமாவட்ட ஆயர்.

ஆயுதம் தாங்கிய சிலர், பேராலயத்திற்குள் இருந்த புனிதப் பொருட்களை சேதமாக்கியுள்ளதுடன், பெரிய மரச்சிலுவை ஒன்றையும் தகர்த்தெறிந்துள்ளதைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த மராவி ஆயர் Edwin de la Pena  அவர்கள், கிறிஸ்தவர்களின் விசுவாசத்தையே அவர்கள் காலடியில் மிதித்துள்ளதைக் காணமுடிகிறது என்று கவலை வெளியிட்டார்.

கடந்த மாதம் 23ம் தேதி, மராவி பேராலயத்திற்குள் நுழைந்த இஸ்லாமியப் புரட்சியாளர்கள், அங்கு செபித்துக் கொண்டிருந்த 15 விசுவாசிகளையும், அருகில் தங்கியிருந்த அருள்பணியாளரையும் கடத்திச் சென்றதுடன், பேராலயத்தையும் தீவைத்து கொளுத்திவிட்டுச் சென்றனர்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.