2017-06-10 15:35:00

இயற்கையை பாதுகாக்கும் ஒன்றிணைந்த கடமை


ஜூன்,10,2017. 'மற்ற உயிர்களின் தாராளமனப்பான்மையின் காரணமாகவே, எந்த ஓர் உயிரும் இவ்வுலகில் வாழமுடியும்' என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர் ஒருவரைச் சார்ந்து வாழும் நிலையையும், தராளமனப்பான்மையின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், 'இறைவனின் படைப்பு குறித்த பொறுப்பு' என்ற தலைப்பில் இத்தாலியின் பொலோஞ்ஞா நகரில் இடம்பெறும் பல்சமயக் கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரால் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின்.

அனைவருக்கும் பொதுவான, உலகமெனும் அழகிய இல்லத்தை பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்புணர்வுகளை வலியுறுத்தும் இக்கருத்தரங்கு, அனைவரின் ஒன்றிணைந்த கடமையை வளர்க்க உதவும் என்ற திருத்தந்தையின் நம்பிக்கையும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.