2017-06-12 17:22:00

இந்தியாவில் மனித மற்றும் சமூக உரிமைகளில் முன்னேற்றமில்லை


ஜூன்,12,2017. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு ஆட்சியில், குடிமக்களின் மனித உரிமைகளிலும், சமூக உரிமைகளிலும் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளன, இந்திய நாட்டின் சமூக அமைப்புக்கள்.

தலித் மக்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதும், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் உரிமை மீறல்களும் தொடர்வதாக உரைக்கும், ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பின் இந்திய கிளைத் தலைவர் Aakar Patel  அவர்கள், அனைவரின் முன்னேற்றத்திற்கும் உறுதி வழங்கியுள்ள மோடி அரசின் வாக்குறுதிகள், தோல்வியையே சந்தித்துள்ளன என்று கூறினார்.

தலித் மக்கள், இந்தியாவில், பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக, உரிமை மீறல்கள், தொடர்ந்து இடம்பெறுவதாகவும், இந்திய சமூக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.