2017-06-12 17:03:00

திருத்தந்தை: ஆறுதல் என்பது, ஒரு கொடை, மற்றும், கடமை


ஜூன்,12,2017. ஆறுதல் என்பது, இறைவனால் வழங்கப்படும் ஒரு கொடை, மற்றும், மற்றவர்களுக்கு நாம் வழங்கவேண்டிய கடமை என்று, இத்திங்களன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர் பவுல், ஆறுதலைப் பற்றி கூறியுள்ள வார்த்தைகளையும், இயேசு வழங்கிய மலைப்பொழிவில் கூறப்பட்டுள்ள 'பேறுபெற்றோர்' வாக்கியங்களையும் மையப்படுத்தி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, ஆறுதல் என்பது, இறைவன் வழங்கும் கொடை, அக்கொடையை நாம் பிறருக்கு வழங்கும்போதுதான் அது முழுமையடைகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

எவரும், தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ள முடியாது, ஆகவே, ஆறுதல் பெறவேண்டுமெனில், ஒருவர் எளிய மனதினராகவும், திறந்த மனதுடையவராகவும், அநீதியாளர்கள்போல், மனதை மூடிவைக்காதவர்களாகவும் செயல்படவேண்டியது அவசியம் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

நாம் பெறும் ஆறுதல், பணியாக உருமாற்றம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, ஆறுதல் பெறவேண்டிய தேவையில் இருக்கும் ஒவ்வொருவரும், ஆறுதல் பெறுவதோடு நின்றுவிடாமல், அதை, தேவையில் இருக்கும் பிறருக்கு வழங்கும்போது, அது பணியாக மாறுகிறது என்று எடுத்துரைத்தார்.

இதயங்களைத் திறந்து வையுங்கள், ஏனெனில், ஆறுதல் என்ற கோடையை இறைவனிடமிருந்து பெறும்போது, மகிழ்ச்சி நம்மில் தங்கும் என்றும், திருத்தந்தை தன் மறையுரையில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.