2017-06-13 16:15:00

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கிறிஸ்தவரின் புதிய அர்ப்பணம் தேவை


ஜூன்,13,2017. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய பொது இல்லமாக இவ்வுலகை பாதுகாப்பதில், கிறிஸ்தவர்கள் அனைவரின் புது அர்ப்பணம் ஒன்று தேவைப்படுகின்றது என விண்ணப்பித்துள்ளது, உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.

2005ம் ஆண்டு பாரிஸ் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு தற்போது பின்வாங்கியிருக்கும் நேரத்தில், சுற்றுச்சூழல் காக்கப்படவேண்டிய விழிப்புணர்வும், அர்ப்பணமும், அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்கிறது, WCC என்ற இந்த கிறிஸ்தவ அமைப்பு.

சுவிட்சர்லாந்தின் Bossey எனுமிடத்தில், தங்கள் மைய அவைக்கூட்டத்தை நடத்திவரும் இந்த அமைப்பு, அமெரிக்க புதிய அதிபரின் தீர்மானம், ஏழைகளை மிகப்பெரிய அளவில் பாதிப்பதாக இருக்கும் என்ற கவலையையும் வெளியிட்டுள்ளது.

நம் குழந்தைகளின் வருங்காலம் மட்டுமல்ல, இன்றையச் சூழலில் உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி போன்றவைகளும், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன எனவும், கவலையை வெளியிட்டுள்ளது கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.