சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

ஊழல் பற்றிய பன்னாட்டு கலந்துரையாடல் கூட்டம்

வெனிசுவேலாவில் ஊழலுக்கெதிரான போராட்டம் - AFP

14/06/2017 16:02

ஜூன்,14,2017. ஊழல் பற்றிய பன்னாட்டு கலந்துரையாடல் என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, வத்திக்கானில் இவ்வியாழனன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.

இக்கருத்தரங்கு பற்றி, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அறிவித்த, இத்திருப்பீட அவை, உலகளாவிய ஊழல் பிரச்சனை குறித்து சிந்திப்பதற்காக, இத்தகையக் கருத்தரங்கு, முதல் முறையாக நடத்தப்படுகின்றது எனக் கூறியது.

கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவரல்லாதவர்கள், திருஅவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், நீதிபதிகள், காவல்துறைப் பிரதிநிதிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும், நிறுவனங்களின் உறுப்பினர்கள், குற்றத்திற்குப் பலியானவர்கள், செய்தியாளர்கள், அறிஞர்கள், திருப்பீடத்திற்கான அரசியல் தூதர்கள் என, பல துறைகளைச் சார்ந்தோர், இக்கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்.

இக்கருத்தரங்கில் இடம்பெறும் உரையாடலில், சமூக வலைத்தளங்கள் வழியாகப் பங்குபெறுவதற்கு வசதியாக, டுவிட்டர், முகநூல் போன்ற வலைத்தள செயலிகளையும் உருவாக்கியுள்ளது இத்திருப்பீட அவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

14/06/2017 16:02