சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ மனித உரிமைகள்

முதியோருக்கு கூடுதல் பராமரிப்பும் அக்கறையும் தேவை

முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு பெங்களூருவில் பேரணி - EPA

15/06/2017 16:18

ஜூன்,15,2017. 2015ம் ஆண்டுக்கும், 2030ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலகில், முதியோரின் எண்ணிக்கை கூடும் என்றும், அதற்கேற்றதுபோல் முதியோர் குறித்து, கூடுதல் பராமரிப்பும் அக்கறையும் தேவைப்படும் என்றும் ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

ஜூன் 15, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு ஐ.நா. அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதியோருக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள், பல நாடுகளில் மூடி மறைக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

வாழ்விடங்கள் மறுக்கப்பட்டு, சொத்துக்கள் பறிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் விடப்படும் முதியோரின் எண்ணிக்கை கூடி வருவதாகவும், ஐ.நா. அறிக்கை, கவலை வெளியிட்டுள்ளது.

முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள், ஜூன் 15ம் தேதி சிறப்பிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம், 2011ம் ஆண்டு, ஐ.நா. அவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

15/06/2017 16:18