சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

இலங்கையில் அமைதியை ஊக்குவிப்பதற்கு திருப்பயணம்

இலங்கையில், திருக்குடும்ப அருள்கோதரிகள் சபையினர், நாடு முழுவதும் அமைதித் திருப்பயணம் - RV

16/06/2017 16:11

ஜூன்,16,2017. இலங்கையில் அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிப்பதற்கு, திருக்குடும்ப அருள்கோதரிகள் சபையினர், நாடு முழுவதும் அமைதித் திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அமைதிப் பயணத்தைத் தொடங்கிய 49 திருப்பயணிகள், கொழும்பு செல்லும் வழியில், Wennappuwaவில் தங்கி, அங்கு கத்தோலிக்கர்களைச் சந்தித்துப் பேசினர். மொழிப் பிரச்சனை இருந்தபோதிலும், அன்பு மொழிகளால் அனைவரும் தங்களின் பாசத்தைப் பகிர்ந்துகொணடனர் என, ஆசியச் செய்தி கூறுகின்றது.

ஜூன் 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை திருக்குடும்ப அருள்கோதரிகள் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திருப்பயணத்தில், 42 சிறுமிகள், இளம் பெண்கள், மற்றும் ஏழு அருள்கோதரிகள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் வடக்கிலிருந்து தெற்கு வரை பயணம் செய்த இவர்கள், ஒருவர் ஒருவர் மீது அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து, நட்புணர்வை வளர்த்துக் கொண்டு, அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவித்தனர் எனவும் ஆசியச் செய்தி கூறுகின்றது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

16/06/2017 16:11