சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

ஏழு இறை ஊழியர்களின் வீரத்துவமான வாழ்வு ஏற்பு

புனிதர்களின் படங்கள் - REUTERS

17/06/2017 14:56

ஜூன்,17,2017. மறைசாட்சிகள், ஆயர்கள், துறவு சபை நிறுவனர், பொதுநிலையினர் போன்றோரை, புனிதர் மற்றும், அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, ஏழு பேரின் வீரத்துவ புண்ணிய வாழ்வு குறித்த விபரங்களை அங்கீகரித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர் நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இவ்வெள்ளி மாலையில், திருத்தந்தையைச் சந்தித்து, இந்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.

பொதுநிலை விசுவாசியான இறை ஊழியர் Teresio Olivelli அவர்கள், 1945ம் ஆண்டு சனவரி 17ம் தேதி, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொலை செய்யப்பட்டார். இத்தாலியின் பெல்லாஜ்ஜோ என்ற ஊரில், 1916ம் ஆண்டு சனவரி 7ம் தேதி, பக்தியுள்ள கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த இவர், இரண்டாம் உலகப்போரின்போது சிறைவைக்கப்பட்டு, திருமறைக்காக உயிர் துறந்தார்.

Porto ஆயரான இறை ஊழியர் Antonio Giuseppe De Sousa Barroso (நவ.5,1854-ஆக.31,1918);

Aguas Calientes ஆயரும், இயேசுவின் திருஇதய கத்தோலிக்க ஆசிரியர்கள் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவருமான இறை ஊழியர் Giuseppe di Gesù López y González (அக்.16,1872 – நவ.11,1950);

San Marco Argentano-Bisignano ஆயரும், பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்தவருமான  இறை ஊழியர் Agostino Ernesto Castrillo (பிப்.18,1904 – 16,அக்.1955);

கப்புச்சின் துறவு சபயைச் சேர்ந்த இறை ஊழியர் Giacomo da Balduina (ஆக.2,1900 – ஜூலை,21, 1948);

கார்மேல் சபையின் துறவியும், தூரின் கார்மேல் துறவு இல்லத்தை ஆரம்பித்தவருமான இறை ஊழியர் Maria degli Angeli (நவ.16,1871 – அக்.7,1949);

பிரான்சிஸ்கன் அமலமரி சபையைச் சேர்ந்த அருள்சகோதரி இறை ஊழியர் Umiltà Patlán Sánchez (மார்ச்,17,1895 – ஜூன்,17,1970) ஆகியோரின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களை அங்கீகரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

17/06/2017 14:56