சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ மனித உரிமைகள்

ஆப்ரிக்காவில் சிறார் புலம்பெயர்ந்தவர் கடும் நெருக்கடியில்

உணவுப்பொருள்களை வாங்க மணிக்கணக்காய் பயணிக்கும் தென் சூடான் மக்கள் - AP

21/06/2017 16:03

ஜூன்,21,2017. ஆப்ரிக்காவில், குறிப்பாக, தென் சூடானில், வன்முறை மற்றும், அரசியல் நிலையற்றதன்மைக்கு அஞ்சி, உகாண்டா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகளுக்கு வருகின்ற, புலம்பெயர்ந்தவர் நிலை, அச்சமூட்டும் வகையிலுள்ளது என, ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.

உலக புலம்பெயர்ந்தவர் நாளான இச்செவ்வாயன்று இவ்வாறு தன் அறிக்கையில் கூறியுள்ள, யூனிசெப் எனப்படும் ஐ.நா.வின் சிறார் நல நிறுவனம், தென் சூடானில், 2013ம் ஆண்டு டிசம்பரில், வன்முறை வெடித்ததிலிருந்து, பத்து இலட்சத்திற்கு அதிகமான சிறார் உட்பட, இலட்சக்கணக்கான மக்கள், அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தது.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், இம்மக்கள் அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர் என, ஐ.நா.வின், கிழக்கு மற்றும், தெற்கு ஆப்ரிக்கப் பிரதிநிதி லைலா பக்காலா அவர்கள் கூறினார்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், ஆண்டுக்கு 1,300 குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டில் இறப்பதாக கூறப்பட்டுள்ளது. இக்குழந்தைகளின் வயது ஒன்றிலிருந்து 17 வரை இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. இவர்களில் மூன்று குழந்தைகள், சம்பவ இடத்திலேயே இறந்து விடுகின்றனர். மீதி 15.8 விழுக்காட்டினர் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

21/06/2017 16:03