2017-06-21 16:29:00

சீனாவில் ஆயர் Shao Zhumin விடுதலைக்காக ஜெர்மன் தூதர்


ஜூன்,21,2017. சீனாவில் காவலில் வைக்கப்பட்டுள்ள, Wenzhou ஆயர் Peter Shao Zhumin அவர்கள் விடுதலை செய்யப்படுமாறு, சீன அரசை கேட்டுக்கொண்டுள்ளார், சீனாவுக்கான ஜெர்மன் தூதர், Michael Clauss.

சீனாவிலுள்ள ஜெர்மன் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆயர் Shao Zhumin அவர்களின் விடுதலைக்காக விண்ணப்பித்துள்ளதுடன், சீனாவில், சமய நடவடிக்கைகள் மீது கொண்டுவரப்படவுள்ள புதிய சமய விதிமுறைகள் தொகுப்பு குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொகுக்கப்பட்டுள்ள மதம் சார்ந்த புதிய விதிமுறைகள், சமய சுதந்திரம் மற்றும், மத நம்பிக்கை குறித்த உரிமைகளில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளார், ஜெர்மன் தூதர் Michael Clauss.

கடந்த பத்து ஆண்டுகளில், ஒரு ஐரோப்பிய தூதர், ஓர் ஆயரின் விடுதலைக்காக, குரல் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை என, ஆசியச் செய்தி கூறுகின்றது. 

ஆயர் Shao Zhumin அவர்கள், கடந்த இலையுதிர் காலத்திலிருந்து, தெரியாத இடங்களுக்கு, நான்குமுறை கட்டாயமாக அனுப்பப்பட்டார் எனவும், அவர் வீடு திரும்பியதிலிருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.