2017-06-24 15:39:00

வெப்பத்தால் இடம்பெறும் உயிரிழப்புக்களைத் தடுக்க முடியும்


ஜூன்,24,2017. இந்தியாவில், 2015ம் ஆண்டில் வீசிய வெப்பக்காற்றினால் 2,500 பேர் இறந்துள்ளவேளை, இக்காலநிலை பற்றி ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்தியாவில், ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கு அல்ல, மாறாக, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, கடும் வெப்பக்காற்று வீசும் நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த 2017ம் ஆண்டில், கோடையின் வெம்மை மிகக் கடுமையாய் இருந்தவேளை, அடுத்த ஆண்டில், கடும் வெப்பம் நிலவக்கூடும் என்றும், இந்நிலை, 1901ம் ஆண்டில் வெப்பநிலை பதிவு செய்யத் தொடங்கப்பட்டதிலிருந்து, மிகக் கடுமையானதாக இருக்கும் எனவும், அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவின் வெப்பநிலை குறித்து, ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த, குஜராத்தின் காந்திநகர், இந்திய பொதுநலவாழ்வு நிறுவன இயக்குனர், 59 வயது நிரம்பிய Dileep Mavalankar அவர்கள், வெப்பத்தால் இடம்பெறும் உயிரிழப்புக்களைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

பொதுநலக் கல்வி, கடும் வெப்பம் குறித்த எச்சரிகைகள், மிகவும் வறுமையில் வாழும் மக்களைப் பாதுகாக்க முயற்சிகள் போன்றவை வழியாக, இந்த இறப்புக்களைத் தடுக்க முடியும் என, Mavalankar அவர்கள் கூறியுள்ளார்.

இந்தியாவில், 2015ம் ஆண்டில் 2,500 பேர் வெப்பத்தால் இறந்தனர். இவர்களில், ஆந்திராவில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,700க்கும் மேல் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

ஆதாரம் : IANS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.