2017-06-26 16:47:00

சீன நிலைகள் குறித்து திருத்தந்தையும், திருப்பீடமும்


ஜூன்,26,2017.  சீனாவின் Xinmo எனுமிடத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் உயிரிழந்த, மற்றும், காயமடைந்த மக்கள் குறித்த தன் ஆழ்ந்த கவலையை, ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Xinmo பகுதியில் இடம்பெற்ற பெருமழையால், சனிக்கிழமை காலை, நிலச்சரிவு ஏற்பட்டதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், பல வீடுகள் சேதமாகியுள்ளன.

இதற்கிடையே, சீனாவில் காணாமல்போயுள்ள ஆயர் Pietro Shao Zhumin குறித்து, திரு அவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இத்திங்களன்று காலை பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார், திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke.

திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கரிடையே பணியாற்றிவந்த ஆயர் Pietro Shao Zhumin அவர்கள் குறித்து, அவர் பணியாற்றிவந்த Wenzhou மறைமாவட்ட விசுவாசிகளுக்கோ, அவரின் உறவினர்களுக்கோ எதுவும் தெரியவில்லை எனவும் கூறினார் Burke.

ஆயரை எடுத்துச் சென்ற சீன காவல்துறை, அவரை எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.