2017-06-29 15:21:00

லாவோஸ் நாட்டின் முதல் கர்தினால் Luis Marie-Ling


ஜூன்,29,2017. லாவோஸ் நாட்டில் நிலவும் வறுமை, துன்பங்கள், மதத்திற்கெதிரான பெரும் இன்னல்கள் ஆகிய மூன்றும், தலத்திருஅவையைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்று, புதிய கர்தினால்களில் ஒருவர் கூறினார்.

லாவோஸ் நாட்டின் முதல் கர்தினாலாகப் பொறுப்பேற்றுள்ள Luis Marie-Ling Mangkhanekhoun அவர்கள், தங்கள் நாட்டு திருஅவை இன்னும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது என்று எடுத்துரைத்தார்.

Paksé மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான கர்தினால் லிங்க் அவர்கள், 1975ம் ஆண்டு, கம்யூனிச ஆட்சியின்போது, தான் மூன்றாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவத்தைக் குறித்துப் பேசியபோது, கிறிஸ்துவை அறிவித்ததே, தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்பதை அறிந்து, தான் மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.

64 இலட்சம் மக்கள் தொகை கொண்ட லாவோஸ் நாட்டில், 45,000 கத்தோலிக்கர்கள் உள்ளனர் என்றும், இவர்களிடையே, 20 அருள் பணியாளர்களும், 98 துறவிகளும் பணியாற்றுகின்றனர் என்றும் ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.