2017-06-30 14:35:00

நல்லவற்றைக் காண கிறிஸ்தவ நம்பிக்கை அவசியம்


ஜூன்,30,2017. “நல்லவற்றைக் கண்டுபிடிக்கவும் பார்க்கவும், சக்தியுடைய புதிய கண்ணோட்டத்தை வழங்கும், கிறிஸ்தவ நம்பிக்கை ஊட்டப்படவேண்டியது, மிகவும் அவசியமாகின்றது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

"Fundación Vitae" எனப்படும் மனித வாழ்வுக்கு ஆதரவான நிறுவனத்தின் ஏழு பிரதிநிதிகளையும், விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் Gerhard Ludwig Müller, அர்ஜென்டீனாவின் San Juan du Cuyo பேராயர், Jorge Eduardo Lozano ஆகிய இருவரையும், இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருப்பீடத்திற்குத் தூதர்களாகப் பணியாற்றி, அதனை நிறைவுசெய்யும் மொந்தேநெக்ரோ குடியரசு, லித்துவேனியா, எகிப்து ஆகிய நாடுகளின் தூதர்களையும், இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து, தன் நல்வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.