சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

உலக உணவு தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் திருத்தந்தை

FAO நிறுவன பொது இயக்குனருடன் José Graziano da Silva - ANSA

03/07/2017 16:28

ஜூலை.03,2017.  இவ்வாண்டு அக்டோபர் 16ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள, FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்று உரையாற்றுவார் என அறிவித்தார், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் 40வது பொது அவைக்கூட்டத்தில், திருத்தந்தையின் செய்தியை வாசித்தளித்தபின், இத்தகவலை வெளியிட்ட திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், ‘புலம்பெயர்தலின் வருங்காலத்தை மாற்றியமைத்தல்' என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்படும் உலக உணவு நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, FAO தலைமையக நிகழ்ச்சிகளில் திருத்தந்தை கலந்துகொள்வார் என்றார்.

FAO நிறுவனத்தின் பொது இயக்குனர் José Graziano da Silva  அவர்கள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை, அத்தலைமையகத்திற்கு வர உள்ளதாக, மேலும் கூறினார், கர்தினால் பரோலின்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

03/07/2017 16:28