2017-07-03 15:52:00

சீர்திருத்த சபைகளின் அவையும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளும்


ஜூலை.03,2017. யார் மீட்படையக்கூடும் என்பதைக் கூறும் ஏற்புடைமை கொள்கையில், கத்தோலிக்கர், லூத்தரன் மற்றும் மெத்தடிஸ்ட் அவைகளிடையே இதுவரை நிலவிவந்த கருத்து ஒருங்கிணைப்பில், உலக சீர்திருத்த சபைகளின் அவையும் இப்புதனன்று இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு, கிறிஸ்தவ முழு ஒன்றிப்பை நோக்கியப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கருதப்படும் என்று கூறப்படுகிறது.

1517ம் ஆண்டு மார்ட்டின் லூத்தர், பாவ மன்னிப்பு முறைகளுக்கு எதிராக தன் குரலை எழுப்பிய ஜெர்மனியின் விட்டன்பர்க்கில், ஜூலை 5, இப்புதனன்று இடம்பெற உள்ள கூட்டத்தில், உலக கிறிஸ்தவ  சீர்திருத்த சபைகளின் அவை, ஒன்றிப்பை நோக்கிய தன் இசைவைத் தர முன்வந்துள்ளது.

சீர்திருத்த சபைகளுக்கும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையே நிலவும் சில முரண்பாடுகள் இதன் வழியாக நீக்கப்பட்டு, பிற கிறிஸ்தவ சபைகளுக்கும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையே துவக்கப்பட்டுள்ள ஒன்றிப்பு முயற்சிகள் வேகம் பெறும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இணைப்பு என்பது வெறும் வெளி அடையாளமாக இல்லாமல், ஒருமைப்பாட்டில் இணைந்து உழைத்து, நற்செய்திக்கு ஒன்றிணைந்த சாட்சியை வழங்குவதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.