2017-07-04 14:41:00

பாசமுள்ள பார்வையில் - இழப்பின் வலியறிந்தோர் பேறுபெற்றோர்...


"வெளிச்சம் வெளியே இல்லை" என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதியுள்ள ஒரு கவிதை இதோ...

சாலையைக் கடந்து செல்வதற்காகக் காத்திருந்தார்கள்.

சிக்னல் கண்ணசைத்ததும் பரபரப்போடு பறந்தார்கள்.

பார்வையில்லாத வயோதிகர் ஒருவர்,

சாலையின் குறுக்கே, தன்னுடைய ஊன்று கோலையே கண்களாக்கி,

ஊர்ந்து கொண்டிருந்தார்...

அருகிலிருந்தோர் அவசரமாய்ப் பறக்க...

பார்வையில்லாத அவர் பாதியில் திகைக்க...

மாறப் போகிறேன் என்றது சிக்னல்;

பாயப் போகிறேன் என்றது பஸ்.

சட்டென்று வேகமாய் வந்த இளம் பெண்ணொருத்தி,

அவரைக் கையில் பிடித்து இழுத்தபடி, விரைந்து சாலையைக் கடந்தாள்.

உதவியாய் அவருடன் நடந்தாள்.

தெருவோரம் சென்றவள் திரும்பியபோதுதான் தெரிந்தது,

அவளுக்கு உள்ளதே அந்த ஒரு கைதான் என்று.

இரு கைகளும் இருந்த பலர், பார்வை இழந்தவருக்கு உதவி செய்யாமல் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு கை மட்டுமே உள்ள அந்தப் பெண்ணால் மட்டும் எப்படி அந்த உதவியைச் செய்ய முடிந்தது? அவருக்குத்தான், இழப்பின் வலி தெரிந்திருந்தது. இழப்பின் வலியுடன் வாழ்ந்த மற்றொருவருக்கு வழிகாட்டத் தெரிந்திருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.