2017-07-05 15:48:00

வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம்


ஜூலை,05,2017. 2030ம் ஆண்டுக்குள், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை அடைவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இன்னும், பல கோடி மக்கள் இந்த முயற்சிகளிலிருந்து புறந்தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், காப்புரிமைகள் குறித்து, ஜூலை 4, இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

மனித சமுதாயத்தை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த சரியான புரிதல் இல்லாததால், இந்தப் பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்படும் வலுவற்றோர், முன்னேற்ற முயற்சிகளிலிருந்து அகற்றப்படுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ளதை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

முன்னேற்ற இலக்குகள் பல வகுக்கப்பட்டிருந்தாலும், அவற்றில், வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு என்ற இலக்குகளுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்பதை, திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.