2017-07-07 16:10:00

இறையழைத்தல்களை ஊக்குவிக்கும்போது கவனத்துடன் செயல்பட..


ஜூலை,07,2017. துறவற வாழ்வுக்கு இறையழைத்தல்களை ஊக்குவிக்கும்போதும், துறவு இல்லங்களில் பணியாற்றுவதற்கு ஆட்களைத் தெரிவுசெய்யும்போதும், மிகவும் கவனத்துடன் செயல்படுமாறு, இந்திய இருபால் துறவு சபைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது நிலவிவரும் சூழலில், சட்டத்திற்குப் புறம்பே மதமாற்றம் என, எளிதாகக் குற்றம் சாட்டப்படும் போக்குத் தெரிவதால், துறவற வாழ்வில் சேரவிரும்புகின்றவர்களைத் தெரிவுசெய்யும்போது கவனத்துடன் செயல்படுமாறு, துறவு சபைகளைக் கேட்டுக்கொண்டுள்ளது, அந்த அமைப்பு.

கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும், அருள்சகோதரிகளைக் கொண்ட, FORUM எனப்படும் நீதி மற்றும் அமைதிக்கான துறவற அமைப்பு, இந்தியாவின் அனைத்து துறவு சபைகளுக்கும் அனுப்பியுள்ள வழிமுறைகளில், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

துறவு சபைகளில் புதிதாகச் சேர விரும்புவோர் மற்றும், இல்லங்களில் வேலை செய்ய வருபவர்க்கு, பயணத்திற்கோ அல்லது ஏனைய செலவுகளுக்கோ பணம் கொடுக்க வேண்டாமெனவும், இவர்களோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டாமெனவும், கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

FORUM அமைப்பு, இவ்வாறு பத்து வழிமுறைகளை அனுப்பியுள்ளது என, UCA செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.