சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

அன்னை மரியாவின் தாய்மைக்குரிய பாதுகாப்பில் கடல் பணியாளர்கள்

லாம்பதூசா தீவில் திருத்தந்தை - ANSA

10/07/2017 15:47

ஜூலை,10,2017. இஞ்ஞாயிறன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட உலக கடல் தினத்தையொட்டி, மீன் பிடி தொழில் புரிவோர் மற்றும் கடலில் பயணிப்போருக்கென சிறப்புச்செய்தி ஒன்றை தன் டுவிட்டர் பக்கத்தில் இஞ்ஞாயிறன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'தங்கள் இல்லங்களிலிருந்து வெகுதூரத்தில், கடலில் சிரமங்களை அனுபவிக்கும் மீனவர்கள், கடலில் பயணிப்போர் என அனைவரையும் கடலின் விண்மீனாம் அன்னை மரியாவின் தாய்மைக்குரிய பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன்' என, இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியம், இஸ்பானியம், போர்த்துக்கீசியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இலத்தீன், போலந்து, அராபியம் ஆகிய ஒன்பது மொழிகளில், ஏறத்தாழ தினமும் குறுஞ்செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

10/07/2017 15:47