சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

ஐரோப்பாவின் உயிர்த்துடிப்புடைய பாரம்பரிய மதிப்பீடுகள்

ஐரோப்பாவின் பாதுகாவலரான புனித பெனடிக்ட் - RV

11/07/2017 16:17

ஜூலை,11,2017. ஐரோப்பாவின் பாரம்பரிய மதிப்பீடுகள் மீண்டும் உயிர்த்துடிப்புடையதாக மாறவேண்டும் என்பதை வலியுறுத்தி, இச்செவ்வாய்க்கிழமையன்று டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

'புதுப்பிக்கப்பட்ட உயிர்த்துடிப்புடனும், உணர்வுப்பூர்வமான பேரார்வத்துடனும் முன்வைக்கப்படும் தகுதியுடைய ஆன்மீக மதிப்பீடுகளையும், இலட்சியங்களின் தனக்கேயுரிய வழிமரபையும் கொண்டுள்ளது ஐரோப்பா' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பாவின் பாதுகாவலரான புனித பெனடிக்டின் திருவிழா இச்செவ்வாய்க்கிழமையன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஐரோப்பிய மதிப்பீடுகள் பற்றி,  டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

11/07/2017 16:17