சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ மனித உரிமைகள்

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்கள் - REUTERS

15/07/2017 15:44

ஜூலை,15,2017. எகிப்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை நிறுவனங்களில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களில், ஐந்து விழுக்காட்டினர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12, இப்புதனன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையோடு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும், சமூகநல அமைப்புகளிலும், ஐந்து விழுக்காடு வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இக்கிறிஸ்தவ சபையின் இளையோர் மேய்ப்புப்பணி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே தொழிற்கல்வி பயிற்சிகளை வழங்கி வருகின்றன என, பீதேஸ் செய்தி தெரிவிக்கின்றது.  

எகிப்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர், முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்கள், இவ்வாறு தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி

15/07/2017 15:44