2017-07-15 15:14:00

ஈராக்கின் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொள்வதற்கு..


ஜூலை,15,2017. குழப்பங்களும், சிக்கல்களும், மோதல்களும் நிறைந்த ஈராக்கின் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொள்வதற்கு, அந்நாட்டின் கடந்தகால வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஈராக் மற்றும், ஜோர்டன் நாடுகளுக்கு, திருப்பீடத் தூதராகப் பணியாற்றியவரும், திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தற்போதைய தலைவருமான, கர்தினால் ஃபெர்னான்டோ பிலோனி அவர்கள், ‘ஈராக்கில் திருஅவை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள், வளைகுடாச் சண்டையின்போது ஈராக்கில் வாழ்ந்த அனுபவம், ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களைச் சந்தித்த அனுபவங்கள் போன்றவற்றை வைத்து இந்நூலை எழுதியுள்ளார், கர்தினால் பிலோனி.

கடந்தகாலத் தவறுகள் மீண்டும் இழைக்கப்படாமலிருப்பதற்கு, நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் கர்தினால் கூறியுள்ளார்.

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.