2017-07-15 15:21:00

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு நோன்புடன் செபம்


ஜூலை,15,2017. இலங்கையில், இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும்வேளை, இந்நோயிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதற்கு, நோன்பிருந்து செபிக்குமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

இலங்கையில், டெங்கு காய்ச்சலால், இவ்வாண்டில் இதுவரை 225 பேர் இறந்துள்ள வேளை, இதுவரை நாடு கண்டிராத கொள்ளைநோயாக இது பரவி வருகிறது என்றும், இந்நோயிலிருந்து மக்கள் காப்பாற்றப்படும்படியாக, ஒரு வாரம், செபம் மற்றும்,   உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்குமாறு கூறியுள்ளார், கொழும்பு பேராயர், கர்தினால் இரஞ்சித்.

ஜூலை 15 இச்சனிக்கிழமை முதல், ஜூலை 23, வருகிற ஞாயிறுவரை கத்தோலிக்கர், நோன்பிருந்து செபிக்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் இரஞ்சித்.

இலங்கையில், டெங்கு காய்ச்சலால், 55 ஆயிரம் பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 38 விழுக்காடு அதிகம் என்றும், செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.