சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

தொழில் உலகிற்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல...

வத்திக்கான் தொழில் மனைகளில் பணியாற்றுவோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP

17/07/2017 16:43

ஜூலை,17,2017. கிறிஸ்தவத் தொழிலாளர்களின் உலக இயக்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டையொட்டிய கொண்டாட்டங்களுக்கு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இஸ்பெயின் நாட்டின் அவிலா நகரில் இடம்பெறும், இந்த இயக்கத்தின் அனைத்துலக கூட்டத்திற்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

79 நாடுகளில் இயங்கும் இந்த கிறிஸ்தவத் தொழிலாளர் இயக்கத்தின் 120 பிரதிநிதிகள் பங்குபெறும் இக்கூட்டத்திற்கு அனுப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, நிலம், வீடு, வேலை என்ற மூன்று விடயங்களும், தகுதியான ஒருவாழ்வுக்குத் தேவை என்ற, இந்த பன்னாட்டு கருத்தரங்கின் தலைப்பு குறித்து சுட்டிக்காட்டி, இவை மூன்றும் மனித மாண்புடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என கூறுகிறது.

தொழில் உலகிற்கு நற்செய்தியை எடுத்துச் செல்லவேண்டிய கிறிஸ்தவத் தொழிலாளர்களின் கடமையையும் திருத்தந்தையின் செய்தி வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

17/07/2017 16:43