சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

புனித மலை நோக்கி வழிநடத்தும் கார்மேல் அன்னை

கார்மேல் அன்னை

17/07/2017 16:28

ஜூலை,17,2017. இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட கார்மேல் அன்னை திருவிழாவை முன்னிட்டு, அவ்வன்னையின் வழிநடத்துதல் குறித்து தன் டுவிட்டர் செய்தியை இஞ்ஞாயிறன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இறைவனும் மனிதனும் சந்திக்கும் புனித மலையாம் இயேசுவை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையில் அன்னை மரியா நம்மை வழிநடத்துவாராக'  என தன் டுவிட்டரில் குறிப்பிடுள்ளார் திருத்தந்தை.

கார்மேல் மலையில் குடியிருக்கும் கார்மேல் அன்னை மரியாவை நினைவூட்டும் விதமாக, நாம் சென்றடைய வேண்டிய இலக்கு, புனித மலை எனவும், அதுவே கிறிஸ்து எனவும்  தன்  டுவிட்டரில் உருவகப்படுத்தியுள்ளார், திருத்தந்தை.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

17/07/2017 16:28