2017-07-24 16:17:00

எருசலேமின் அமைதிக்கு, இரு நாடுகளின் ஒத்த அணுகுமுறை


ஜூலை,24,2017. புனித பூமியில் அமைதியைக் கொணரும் நோக்கத்தில், இரு நாடுகளின் தீர்வு ஒன்றை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் முன்வரவேண்டும் என கிறிஸ்தவ, இஸ்லாம், மற்றும், யூத மதத்தலைவர்கள் இணைந்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.

கிறிஸ்தவ, யூத மற்றும் இஸ்லாம் தலைவர்கள் 35பேர் இணைந்து கையெழுத்திட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், இஸ்ரயேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்வே, இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டதாகவும், மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் இருக்கும் என தாங்கள் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்க திருஅவையின் சார்பில் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்களுள், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் அனைத்துலக அமைதி மற்றும் நீதி அவையின் தலைவர் ஆயர் Oscar Cantú அவர்களும், வாஷிங்டன் முன்னாள் பேராயர் கர்தினால் Theodore McCarrick அவர்களும் அடங்குவர்.

ஆதாரம்: USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.