2017-07-24 16:16:00

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் கத்தோலிக்க காரித்தாஸின் பணி


ஜூலை,24,2017. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் இராவல்பிண்டியில், கிறிஸ்தவர்கள் வாழும் சேரிப் பகுதிகள், மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதிகளுக்கு உதவ முன்வந்துள்ளது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

மழையால் பாதிக்கப்பட்ட சேரிப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவசர கால உணவு, படுக்கை விரிப்புக்கள் மற்றும் நல ஆதரவு உபகரணங்கள் தேவைப்படுவதாக உரைத்தார் பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் Amjad Gulzar.

ஜூன் மாதம் 26ம் தேதி முதல் பெய்துவரும் கன மழையால், இதுவரை 82 பேர் இறந்துள்ளதாகவும், 117 பேர் காயமடைந்துள்ளதாகவும், குறைந்தது, 116 வீடுகள் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும் அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானில் இடர் துடைப்புப் பணிகளில் பணியாற்றிவரும் அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, ஏறத்தாழ 550 பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, 30 குழுக்களாகச் செயலாற்றி வருகிறது.

ஆதாரம்: UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.