2017-07-26 15:37:00

அருள்பணி Jacques Hamel அவர்கள் மரணத்தின் முதலாண்டு நினைவு


ஜூலை,26,2017. மக்களில் ஒருவராக தன்னையே மறைத்து வாழ்ந்த அருள்பணி Jacques Hamel அவர்களின் எளிமையான வாழ்வு, அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக, உந்து சக்தியாக விளங்குகிறது என்று, பிரெஞ்சு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Georges Pontier அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, ஜூலை 26ம் தேதி, அருள்பணி Hamel அவர்கள், Saint Etienne du Rouvray என்ற ஊரிலுள்ள ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில், இரு இஸ்லாமிய இளையோரால் கழுத்து அறுக்கப்பட்டு உயிர் துறந்தார்.

அவர் இறையடி சேர்ந்த நாளின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, Rouen பேராயர், Dominique Lebrun அவர்கள், அருள்பணி Hamel அவர்கள் கொலையுண்ட அதே ஆலயத்தில், அதே நேரத்தில், இப்புதன் காலை திருப்பலி நிறைவேற்றினார்.

இத்திருப்பலியில், பிரெஞ்சு அரசுத்தலைவர் Emmanuel Macron, பிரதமர் Édouard Philippe, மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அருள்பணி Hamel அவர்களின் நினைவாக, Saint Etienne du Rouvray ஊர் சதுக்கத்தில் அவரது சிலை ஒன்று நிறுவப்பட்டது.

அருள்பணி Hamel அவர்கள் இறந்து எட்டு மாதங்களே ஆன நிலையில், இவ்வாண்டு ஏப்ரல் மாதம், அவரை அருளாளர் நிலைக்கு உயர்த்தும் பணிகளைத் துவங்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.