2017-08-02 15:12:00

ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் இளையோர் விழா


ஆக.02,2018. ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் மீண்டும் குடியமரும் மக்களிடையே உள்ள இளையோரை ஒருங்கிணைத்து, கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த பாபிலோனிய மறைமாவட்டம், இளையோர் விழா ஒன்றை நடத்தியது.

ஏறத்தாழ 550 இளையோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய கல்தேய முதுபெரும்தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், நினிவே சமவெளியில் மீண்டும் கிறிஸ்தவ சமுதாயத்தை கட்டியெழுப்பும் பணியில் இளையோரின் பங்கு மிக அதிகம் என்று கூறினார்.

செபம், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் என்று, இளையோர் விழாவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று பீதேஸ் (Fides) செய்தி கூறியுள்ளது.

கல்தேய வழிபாட்டு முறை கிறிஸ்தவர்களை அதிகம் கொண்ட நகரான அல்கோஷ் (Alqosh), இஸ்லாமிய அரசு என்ற அமைப்பு ஆக்ரமிப்பு செய்த பகுதியின் அருகே அமைந்திருந்ததால், அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளியேறினர் என்றும், தற்போது, அவர்கள் மீண்டும் திரும்பி வருகின்றனர் என்றும் பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.