2017-08-03 15:22:00

ஆசியாவில் சமுதாய அநீதிகளைக் களைய இளையோர் முன்வர..


ஆக.03,2018. ஆசிய நாடுகள் சந்திக்கும் வறுமை, சமுதாய அநீதிகள் என்ற கொடுமைகளைக் களைய ஆசிய திருஅவையுடன் இணைந்து, இளையோர் இன்னும் ஆர்வமாக உழைப்பதற்கு முன்வர வேண்டும் என்று, பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 6ம் தேதி முடிய, இந்தோனேசியா நாட்டில் நடைபெறும் 7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வின் ஆரம்ப நாளன்று, ஆசிய ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் தலைவர், கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

ஆசிய இளையோர் நாள், இளையோரிடம் வளர்க்க விரும்பும் இரு முக்கிய பண்புகள், பரிவு மற்றும் குழுவாகப் பணியாற்றுதல் என்று இந்தோனேசிய ஆயர் பேரவையின் தலைவரும், ஜகார்த்தா பேராயருமான இக்னேசியஸ் சுகார்யோ அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் செமராங் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், ரொபெர்துஸ் ரூபியதமோக்கோ அவர்கள், இக்கொண்டாட்டங்களின் விவரங்களை செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.