2017-08-03 15:28:00

கட்டாய மதமாற்றம், கத்தோலிக்கத் திருஅவையில் நிச்சயமாக இல்லை


ஆக.03,2018. கட்டாய மதமாற்றம் என்பது கத்தோலிக்கத் திருஅவையில் உறுதியாக இல்லை, அவரவர் தங்கள் மனசாட்சியையும், சிந்திக்கும் திறனையும் கொண்டு மதம் மாறும் சுதந்திரத்தை மதிக்கிறோம் என்று இந்திய கர்தினால் ஒருவர் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆகஸ்ட் 1, இச்செவ்வாயன்று, ஜார்கண்ட் மாநிலம் மதமாற்றத் தடைச்சட்டத்தை அமல்படுத்தியத்தைத் தொடர்ந்து, ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த இராஞ்சி பேராயர், கர்தினால் டெலெஸ்போர் டோப்போ அவர்கள் இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் கத்தோலிக்கர்கள் நடத்திவரும் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகிய பணிகளால் மிக அதிக அளவில் பயன்பெறுவோர் கத்தோலிக்கர் அல்லாத பிற மதத்தினரே என்பதை, தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய கர்தினால் டோப்போ அவர்கள், இப்பணிகளின் வழியே மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று கூறினார்.

வறுமையின் காரணமாக, கல்வி வசதிகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவது மட்டுமே கத்தோலிக்கர்களின் நோக்கமாக இருந்ததே தவிர, மாணவ மாணவியரை மதமாற்றம் செய்வது நோக்கமல்ல என்று கர்தினால் டோப்போ அவர்கள் வலியுறுத்திக் கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.