சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

திருத்தந்தை : மனிதர்கள், மதிப்போடு ஏற்கப்படவேண்டிய கொடைகள்

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP

05/08/2017 15:02

ஆக.05,2017. “மற்ற மனிதர்கள், குறிப்பாக, அவர்கள் வலிமையற்றவராகவும், நலிந்தோராகவும் இருக்கும்போது, மதிப்போடு ஏற்கப்படவேண்டிய கொடைகள், ஏனென்றால், கிறிஸ்து, அவர்களில் நம்மைச் சந்திக்க வருகிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கானடாவிலுள்ள அமைதியின் அரசி சீரோ-மலங்கரா மறைமாவட்டத்திற்கு, ஆயர் Philipose Mar Stephanos Thottathil அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் Philipose Thottathil அவர்கள், இந்நாள்வரை, கேரளாவின் Tiruvalla மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றியவர்.

இன்னும், இச்சனிக்கிழமையன்று, ஐரோப்பா மற்றும், ஓசியானியாவில் வாழும் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை விசுவாசிகளுக்குப் பொறுப்பாளராக, ஆயர் John Kochuthundil அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் John Kochuthundil அவர்கள், சீரோ-மலங்கரா திருஅவையின் தலைமையகத்தில் ஆயராகப் பணியாற்றி வந்தவர்.

மேலும், எல் சால்வதோர் நாட்டின் அருளாளர்  பேராயர் ஆஸ்கர் ரொமெரோ அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு விழாவில் தனது பிரதிநிதியாகக் கலந்துகொள்வதற்கு, சிலே நாட்டின் சந்தியாகோ கர்தினால், Andrello Ricardo Ezzati அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வு, சான் சால்வதோரில், ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

05/08/2017 15:02