2017-08-05 15:33:00

கென்ய மக்கள் ஞானத்துடன் வாக்களிக்குமாறு அழைப்பு


ஆக.05,2017. கென்ய நாட்டில் பொதுத் தேர்தல்கள் அண்மித்துவரும்வேளை, அமைதியைத் தேடுபவர்களாக, ஞானத்துடன் வாக்களிக்குமாறு, குடிமக்களை ஊக்கப்படுத்தியுள்ளனர், ஆயர்கள்.

ஆகஸ்ட் 08, வருகிற செவ்வாயன்று நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள கென்ய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர், Philip Anyolo அவர்கள், அரசியலமைப்பின் உரிமையைச் செயல்படுத்துவதற்குரிய வாய்ப்பை நழுவவிட வேண்டாமென, அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“அமைதி மற்றும் வளமையைத் தேடு” என்ற தலைப்பில், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள ஆயர் Anyolo அவர்கள், அமைதியான தேர்தலுக்காக தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் நவநாள் செபங்களில் கலந்துகொண்டு செபிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில், 2007ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகளைமுன்னிட்டு, நாடு தழுவிய இன வன்முறை இடம்பெற்றது. அதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், ஏழு இலட்சம் பேர் புலம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.