சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

கொலம்பியத் திருத்தூதுப் பயண அதிகாரப்பூர்வமான பாடல்

புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட கொலம்பிய மக்கள் - AFP

09/08/2017 16:30

ஆக.09,2017. வருகிற செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 11ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியா நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்காக இயற்றப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான பாடல், ஆகஸ்ட் 8, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

"திருத்தந்தைக்காக பாடுவோம்" என்ற பெயரில் கொலம்பியத் தலத்திருஅவை ஏற்பாடு செய்திருந்த ஒரு போட்டிக்கென அனுப்பப்பட்ட பல பாடல்களில், கார்லோஸ் கொர்வாக்கோ என்பவர் இயற்றிய, "நாம் முதலடியை எடுத்து வைப்போம்" என்ற பாடல் தெரிவு செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"நீர் எங்களுக்கு ஒளியை, அமைதியை, உண்மையின் வார்த்தைகளை கொணர்வதால், எமது மக்கள், இறைவனின் உண்மையான விடுதலையைக் காண்பர்" என்ற மையக்கருத்துடன் அமைந்துள்ள இப்பாடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலின் YouTube காணொளியை, கொலம்பியா நாட்டில் பணியாற்றும், திருநற்கருணையின் தூதர்கள் என்ற துறவு சபையின் அருள் சகோதரிகள் உருவாக்கியுள்ளனர் என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

09/08/2017 16:30